திண்டுக்கல் ரவுடி அழகர்கோவிலில் வெட்டிக்கொலை
திண்டுக்கல்லை சேர்ந்த ரவுடியை அழகர்கோவிலில் சாமிகும்பிடவந்தபோது எதிரிகள் செவ்வாய்க்கிழமை காலை வெட்டிக் கொலைசெய்தனர். அவருடன்வந்த மேலும் மூவரை வெட்டியதில் பலத்தகாயமடைந்தனர்


திண்டுக்கல்லை சேர்ந்த ரவுடியை அழகர்கோவிலில் சாமிகும்பிடவந்தபோது எதிரிகள் செவ்வாய்க்கிழமை காலை வெட்டிக் கொலைசெய்தனர். அவருடன்வந்த மேலும் மூவரை வெட்டியதில் பலத்தகாயமடைந்தனர்.
திண்டுக்கல்லை சேர்ந்தவர் முத்துப்பாண்டி(). இவர்மீது 3 கொலைவழக்கு, கொலைமுயற்சி மற்றும் ஆள்கடத்தல் உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட குற்றவழக்குகள் திண்டுக்கல், சாணார்பட்டி, அம்பாத்துறை மற்றும் தாடிக்கொம்பு காவல்நிலையங்களில் பதிவாகியுள்ளன. இவர் திண்டுக்கல்லில் பசுபதிபாண்டியன் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குர்றவாளியாவார்.
முத்துப்பாண்டியும் அவரது நண்பர்களும் தமிழ்புத்தாண்டையொட்டியும் பௌர்ணமி பூஜைக்காகவும் அழகர்கோவில் வந்தனர். செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணியளவில் கோவிலில் வழிபடச் சென்றபோது, பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் அருகே மறைந்திருந்த 8 பேர் கும்பல் முத்துப்பாண்டியையும் அவருடன் வந்த மேலும் மூவரையும் வெட்டித்தாக்கியது.இதில் முத்துப்பாண்டி அதேயிடத்தில் இறந்தார். காயமடைந்ததில் தாமரைச்செல்வம் (47), கண்மணி (26) ஆகியோர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். லேசான காயமடைந்த மெüலீஸ்வரன் (31) தப்பியோடிவிட்டார்.
சம்பவம்குறித்த தகவலறிந்த கூடுதல் கண்காணிப்பாளர் கோபால்சாமி, ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. சதீஸ்குமார் சம்பவிடத்தைப்பார்வையிட்டனர். அப்பன்திருப்பதி, ஊமச்சிகுளம் போலீஸார் வழக்குப்பதிவுசெய்து கொலையாளிகளைத் தேடிவருகின்றனர்.
முத்துப்பாண்டி திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஒருகுற்றவழக்கு விசாரணைக்காக வந்தபோதும் கும்பல் வெடிகுண்டை காரில் வீசியது. இச்சம்பவத்தில் அதிஷ்டவசமாகத் தப்பினார். மேலும் இவர் பசுபதிபாண்டியன் கொலைக்குப் பின்னர் எதிரிகள் õவரைக் கொலைசெய்ய சந்தப்பத்தை எதிர்பார்த்தே இருந்துள்ளனர். அழகர்கோவிலில் திங்கள்கிழமை தங்கியிருந்து, காலையில் பெருமாள்கோவில் நடைதிறந்ததும் வழிபடச் சென்றபோது, அவரை சரமாரி தலைமற்றும் உடலில் வெட்டிக் கொலை செய்துள்ளது என போலீஸôர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...