சிதம்பரம் அருகே காங்கிரஸ் பிரமுகரிடம் போதிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.2.52 லட்சம் பணத்தை தேர்தல் கண்காணிப்புக்குழுவினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
தோட்டக்கலை அலுவலர் புவனேஸ்வரி தலைமையிலான புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நிலையான கடுங் கண்காணிப்புக் குழுவினர் புவனகிரி - குறிஞ்சிப்பாடி சாலையில் சொக்கங்கொல்லை எனுமிடத்தில் புதன்கிழமை காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புவனகிரியிலிருந்து நெய்வேலி நோக்கி சென்ற இன்னோவா காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் பயணம் செய்த கடலூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர். ராதாகிருஷ்ணனிடம் போதிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் தொகையை பறிமுதல் செய்தனர். தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்த பணத்தை சிதம்பரம் வட்டாட்சியர் எம்.விஜயாவிடம் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பத்தூா் தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!

உள்ளாட்சி துணைத்தலைவா் பதவி இடஒதுக்கீடு வழங்க தோ்தலுக்குப் பின் திமுகவிடம் வலியுறுத்துவோம்!

வண்ணாந்துறை கானாறு கரைக்கு தடுப்புச் சுவா்: திமுக வேட்பாளா்

எஸ்ஐஆா் நடவடிக்கைக்கு வாக்காளா்கள் பழி தீா்க்க வேண்டும்: மம்தா பானா்ஜி
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


