அனுமதியின்றி ஊர்வலம் சென்ற பாஜக வாகனங்கள் பறிமுதல்
சிதம்பரம் மக்களவை தொகுதி தேசிய ஜனநாய கூட்டணி பாமக வேட்பாளர் சுதா மணிரத்தினத்தை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சி மோட்டார் சைக்கிள் பேரணியை, பாஜக விவசாய பிரிவுத் தலைவர் கே.வி.


காட்டுமன்னார்கோயிலில் காவல்துறை அனுமதியின்றி பிரசார ஊர்வலம் சென்றதாக, பாரதிய ஜனதா கட்சி வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சிதம்பரம் மக்களவை தொகுதி தேசிய ஜனநாய கூட்டணி பாமக வேட்பாளர் சுதா மணிரத்தினத்தை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சி மோட்டார் சைக்கிள் பேரணியை, பாஜக விவசாய பிரிவுத் தலைவர் கே.வி.கண்ணன்பிள்ளை தொடங்கி வைத்தார். பேரணிக்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பேரணிக்கு காவல்துறையினரிடம் அனுமதி பெறவில்லை என்பதால் காட்டுமன்னார்கோயில் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன், பேரணியில் சென்ற 8 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...