6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இளைஞரை அடித்துக்கொன்ற முதியவர் கைது

பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் குமார் (எ) சிவக்குமார் (30). இவர், சாலையோரங்களில் உள்ள பழைய பேப்பர்களை

News image
Updated On :23 ஏப்ரல் 2014, 12:45 pm

தர்மராஜ்

பெரம்பலூரில், இளைஞரை அடித்துக்கொலை செய்த முதியவரை பெரம்பலூர் போலீஸôர் புதன்கிழமை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் குமார் (எ) சிவக்குமார் (30). இவர், சாலையோரங்களில் உள்ள பழைய பேப்பர்களை பொறுக்கி இரும்பு கடையில் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 21ம் தேதி மாலை 6 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் செல்லும் சாலையில் உள்ள வீரமுத்து மகன் ரவி ( 50) வீட்டின் அருகே சிவக்குமார் பேப்பர் பொறுக்கிக்கொண்டிருந்தபோது, ரவி வீட்டின் அருகே கிடந்த இரும்பு கம்பியை எடுத்துக்கொண்டாராம். 

இதையறிந்த ரவி இரும்பு கம்பியால் தாக்கியதில், பலத்த காயமடைந்த சிவக்குமார் பெரம்பலூர் அரசு மருத்துவ மனையிலில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை காலையில் சிவக்குமார் உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது தாய் செல்லம்மாள் (58) அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து, ரவியை புதன்கிழமை கைது பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், ரவியை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, சிவக்குமாரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.