சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சிதம்பரம் அருகே மாமனார் கொலை: மருமகன் தலைமறைவு

சிதம்பரம் அருகே மாமனாரை கொலை செய்து தலைமறைவான மருமகனை போலீஸாரை தேடி வருகின்றனர்.

Updated On :23 ஏப்ரல் 2014, 8:17 am

சிதம்பரம் அருகே மாமனாரை கொலை செய்து தலைமறைவான மருமகனை போலீஸாரை தேடி வருகின்றனர்.

சிதம்பரம் அருகே திட்டுக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன் (40). அவர் அதே ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகள் அஞ்சம்மாளை திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே சண்டையில் அஞ்சம்மாள் தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு மோகன், மனைவியை அழைக்க சென்ற போது, கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அதனை தடுக்க முயன்ற மாமனார் பாலசுப்பிரமணியனை, மருமகன் மோகன் கத்தியால் குத்திவிட்டு தலைமறைவானார்.

இதில் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவான மோகனை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.