6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் : நகை, பணம் கொள்ளை

மேலூர் பகுதியில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள், வீட்டில் இருந்த பெண்களை மிரட்டி நகை, பணம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

News image
Updated On :26 ஏப்ரல் 2014, 5:19 am

தர்மராஜ்

மேலூர் பகுதியில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள், வீட்டில் இருந்த பெண்களை மிரட்டி நகை, பணம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் - சிவகங்கை சாலையில் உள்ளது சின்னப்பெருமாள் பட்டி கிராமம். இங்குள்ள மர வியாபாரி அழகர் வீட்டுக்குள் நள்ளிரவு பனிரெண்டு மணியளவில் புகுந்த 3 முகமூடி திருடர்கள் அழகரின் மாமியாரை கத்தியைக் காட்டி மிரட்டி வீட்டுக்குள் புகுந்தனர்.

அங்கிருந்த அழகரின் மனைவி தேவியிடம் (48) கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணம் எங்கிருக்கிறது என்று கேட்டுள்ளனர். எல்லாம் அடமானத்தில் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் அணிந்திருந்த கம்மல், செயின் உட்பட 5 பவுன் நகைகளைப் பறித்துக் கொண்ட கொள்ளையர்கள் பீரோவில் இருந்த பணம் மற்றும் 2 செல்போனை எடுத்துக் கொண்டு கதவை வெளிப்புறமாக தாழ்போட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.

இது குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மோப்ப நாயின் உதவியுடன் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.