தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

தருமபுரியிலிருந்து பாப்பாரப்பட்டி அருகே மலைப்பகுதியில் உள்ள மருகாரம்பட்டிக்கு தடம் எண் 4 நகர்ப்பேருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை சென்றுக் கொண்டிருந்தது.பேருந்தை

News image
Updated On :27 ஏப்ரல் 2014, 12:18 pm

ராதாகிருஷ்ணன்

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயமடைந்தனர்.

தருமபுரியிலிருந்து பாப்பாரப்பட்டி அருகே மலைப்பகுதியில் உள்ள மருகாரம்பட்டிக்கு தடம் எண் 4 நகர்ப்பேருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை சென்றுக் கொண்டிருந்தது.பேருந்தை தீவட்டிபட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் ஜெயவேல்(52) ஓட்டிச் சென்றனர். இந்த பேருந்து, மலைப்பகுதியில் சுமார் 50 அடி உயரத்தில் உச்சிப்பள்ளம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சிறுது தொலைவு பின்னோக்கி வந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், ஓட்டுநர் ஜெயவேல் மற்றும் அதில் பயணம் செய்த ரத்தினம்மாள்(50), புதூரைச் சேர்ந்த தங்கராஜ் என்பரின் மனைவி கன்னியம்மாள் (36), கெட்டூர்ச் சேர்ந்த நஞ்சன் மனைவி கோவிந்தம்மாள் (45), சாமிசெட்டிப்பட்டியைச் சேர்ந்த முத்துகவுண்டர் மகன் முனுசாமி(85), மருதள்ளியைச் சேர்ந்த மாரி (44), பிக்கம்பட்டியைச் சேர்ந்த மல்லிகா(50) உள்பட 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

விபத்து குறித்து, தகவல் அறிந்து பாலக்கோடு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், பாப்பராப்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக் குறித்து பாப்பாரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.