ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ஓரின சேர்க்கை விவகராம்: காட்டுமன்னார்கோயிலில் மற்றொரு 6-ம் வகுப்பு மாணவர் கொலை

கடலூர் மாவட்ட காட்டுமன்னார்கோயிலில் கழுத்து அறுக்கப்பட்ட கொலை செய்யப்பட்ட 6 வகுப்பு மாணவர், ஒரின சேர்க்கையால் பெரியம்மா மகனால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது போலீஸார் விசாரணையில்

News image
Updated On :28 ஏப்ரல் 2014, 3:13 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மாவட்ட காட்டுமன்னார்கோயிலில் கழுத்து அறுக்கப்பட்ட கொலை செய்யப்பட்ட 6 வகுப்பு மாணவர், ஒரின சேர்க்கையால் பெரியம்மா மகனால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பெரியம்மா மகனை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

விருத்தாசலம் அருகே உள்ள தேவன்குடியைச் சேர்ந்த தங்கதுரை. இவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி மாலா தனது குழந்தைகளுடன் காட்டுமன்னார்கோயில் அருகே பாப்பான்தோப்பு பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டில் கடந்த ஒன்றரை வருடங்களாக தங்கியுள்ளார். இவர்களுக்கு தமிழ்வேலவன் என்ற மகனும், தமிழ்ச்செல்வி, தமிழரசி என்ற மகள்களும் உள்ளனர். மகன் தமிழ்வேலவன் (11) காட்டுமன்னார்கோயில் அருகே அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்நிலையில் தமிழ்வேலவன் ஏப்.12-ம் தேதி மாலை 6.30 மணி முதல் காணவில்லை. இந்நிலையில் மறுதினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீட்டிற்கு அருகாமையில் சுமார் 200 மீட்டர் தூரத்தில் உள்ள சவுக்கு தோப்பில் கழுத்து அறுபட்ட நிலையில் தமிழ்வேலவன் இறந்து கிடந்தார். இதுகுறித்து காட்டுமன்னார்கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவன் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை வில்வகுளம் பஸ்நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த தமிழ்வேலவனின் பெரியம்மா மகன் சதீஷை (24) போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில் மாணவர் தமிழ்வேலவனை, அவரது பெரியம்மா மகன் சதீஷ் கொலை செய்தது தெரியவந்தது. விசாரணை விபரம் வருமாறு: பாப்பான்தோப்பு அருகாமையில் உள்ள தேவனபத்தூரில் வசிக்கும் பெரியம்மா மாலா மகன் சதீஷ் (24). இவர் அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் பிஇ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

தமிழ்வேலனும், சதீஷூம் ஆகிய இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து செல்போன் மற்றும் லேப்டாப்பில் ஆபாச படம் பார்த்து ஒரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனை தமிழ்வேலவன், தனது சக மாணவர்களிடம் தெரிவித்ததால், என்னை மாணவர்கள் கேலி செய்தனர். மேலும் இந்த விஷயத்தில் பெரியவர்களிடம் யாரிடமாவது சொல்லி விடுவான் என்ற அச்சத்தில் கடந்த ஏப்.13-ம் தேதி ஆபாச படம் பார்க்கலாம் வா என அருகாமையில் உள்ள சவுக்கை தோப்பிற்கு அழைத்துச் சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என மாணவர் சதீஷ் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதுகுறித்து காட்டுமன்னார்கோயில் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து, சதீஷை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.