நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஊசுடு ஏரியில் தடையை மீறி மீன்பிடித்த 2 பேர் கைது: படகு, மீன்கள் பறிமுதல்

புதுச்சேரி ஊசுடு ஏரியில் தடையை மீறி மீன் பிடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த படகு, மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :30 ஏப்ரல் 2014, 10:12 am

சுஜித்குமார்

புதுச்சேரி ஊசுடு ஏரியில் தடையை மீறி மீன் பிடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த படகு, மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரியில் உள்ள ஊசுடு ஏரி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இங்கு மீன்களை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவ்வப்போது கட்டுமரத்திலும், பைபர் படகுகளிலும் சென்று மீன்களை பிடித்து வருகின்றனர்.

புதுச்சேரி வனத்துறையினர் அவ்வப்போது ரோந்து சென்று அவர்களை பிடித்து அபராதம் விதித்து வந்தனர். இந்நிலையில் புதன்கிழமை காலை இதேபோல வனத்துறை அதிகாரிகள் தியாகராஜன், இளந்திரையன், எஸ்ஐ கலையரசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஊசுடு பகுதியில் திடீர் ரோந்து மேற்கொண்டனர்.

அப்போது விழுப்புரம் மாவட்டம் வானூரை சேர்ந்த சுரேஷ், சதீஷ் ஆகியோர் கட்டுமரம், பைபர் படகில் ஊசுடு ஏரிக்குள் நுழைந்து வலைகளை வீசி மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். இதையடுத்து அதிகாரிகள் அவர்களை சுற்றி வளைத்துப்பிடித்து 50 கிலோ மீன், 10 வலை, பைபர் படகு, கட்டுமரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் தடையை மீறி மீன்பிடித்த அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 2 பேரையும் சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.