சிதம்பரத்தில் சிகரெட் விலை திடீர் உயர்வு
சிதம்பரம் நகரில் உள்ள கடைகளில் சிகரெட் விலை திடீரென உயர்ந்துள்ளது. நகரில் பெரும்பாலான கடைகளில் கூடுதல் விலைக்கு சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. உதாரணமாக ரூ.6-க்கு விற்பனை


சிதம்பரம் நகரில் சிகரெட் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சிதம்பரம் நகரில் உள்ள கடைகளில் சிகரெட் விலை திடீரென உயர்ந்துள்ளது. நகரில் பெரும்பாலான கடைகளில் கூடுதல் விலைக்கு சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. உதாரணமாக ரூ.6-க்கு விற்பனை செய்ய வேண்டிய கோல்டு பில்டர் சிகரெட் ரூ.7, ரூ.8 என விற்கப்படுகிறது. ரூ.9-க்கு விற்பனை செய்ய வேண்டிய கோல்டு பில்டர் கிங்ஸ் சிகரெட் ரூ.10, ரூ.11-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனை அறிந்த சிகரெட் தயாரிக்கும் ஐடிசி நிர்வாகம், அனைத்து கடைகளிலும் விலை மாற்றம் இல்லை என ஸ்டிக்கர் ஒட்டியது. ஆனால் பல்வேறு கடைகளில் ஸ்டிக்கரை அகற்றிவிட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். எனவே சிகரெட் விலை மாற்றத்தை கட்டுப்படுத்த, ஐடிசி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகை பிடிப்பவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...