தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தொழில்சங்க தலைவரை தாக்கிய எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தருமபுரி நகரைச் சேர்ந்தவர் மாது. இவர் ஆட்டோ சங்கத் தலைவராக உள்ளார். இந்த நிலையில், இவருக்கு சொந்தமான ஆட்டோவை மர்ம நபர் ஒருவர் தருமபுரி வெண்ணாம்பட்டி சாலையில் உள்ள ரயில்வே கேட்

News image
Updated On :3 ஆகஸ்ட் 2014, 11:12 am

ராதாகிருஷ்ணன்

தருமபுரி சிஐடியூ ஆட்டோ ஓட்டுநர் சங்கத் தலைவரை தாக்கிய எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் உதவி காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

இது தொடர்பாக தருமபுரி நகர சிஐடியூ ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் சனிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தருமபுரி நகரைச் சேர்ந்தவர் மாது. இவர் ஆட்டோ சங்கத் தலைவராக உள்ளார். இந்த நிலையில், இவருக்கு சொந்தமான ஆட்டோவை மர்ம நபர் ஒருவர் தருமபுரி வெண்ணாம்பட்டி சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே ஓட்டிச் சென்றார். இது தொடர்பாக மாது தனது ஆட்டோவை ஓட்டி வந்தவரிடம் விசாரித்துக் கொண்டிருந்தாராம். அப்போது, அந்த வழியே வந்த தருமபுரி நகர காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன், மாதுவையும், ஆட்டோ ஓட்டி வந்தவரையும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றார். அப்போது, உதவிக் காவல் ஆய்வாளர் சீனிவாசன் மாது மீது தாக்குதல் நடத்தினார். இதில் அவர் காயடமடைந்தார்.

எனவே, ஆட்டோ தொழில்சங்கத் தலைவரை தாக்கிய எஸ்ஐ மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இதில், மாவட்டச் செயலாளர் நகராஜன், நிர்வாகிகள் விஜயன், சுந்தரமூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.