தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

வேடவாக்கத்தில் வருகிற 9ந்தேதி முப்பெரும் விழா துவக்கம்

மதுராந்தகம் அடுத்த வேடவாக்கம் ஸ்ரீ ஆதிசக்தி முத்துமாரியம்மன் பிரம்மசாரியார் ஞானபீடத்தில் ஆடிப்பௌர்ணமி, அம்மனுக்கு கூழ்வார்த்தல், மக்கள் நலம்பெற மஞ்சள் நீராடும் புனித பொங்கல் இடுதல் ஆகிய முப்பெரும் விழா வருகிற ஆகஸ்ட் 9, 10 இருநாட்களில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

Updated On :4 ஆகஸ்ட் 2014, 2:42 am

மதுராந்தகம் அடுத்த வேடவாக்கம் ஸ்ரீ ஆதிசக்தி முத்துமாரியம்மன் பிரம்மசாரியார் ஞானபீடத்தில் ஆடிப்பௌர்ணமி, அம்மனுக்கு கூழ்வார்த்தல், மக்கள் நலம்பெற மஞ்சள் நீராடும் புனித பொங்கல் இடுதல் ஆகிய முப்பெரும் விழா வருகிற ஆகஸ்ட் 9, 10 இருநாட்களில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

மதுராந்தகம்-வேடந்தாங்கல் நெடுஞ்சாலையை ஒட்டி வேடவாக்கம் நகரம் உள்ளது. இங்கு ஸ்ரீ ஆதிசக்தி முத்துமாரியம்மன் பிரம்மசாரியார் ஞானபீடத்தில் ஒவ்வொரு  தமிழ் வருடத்திலும்,  ஆடிமாதத்தில் ஆடிப்பௌர்ணமி, அம்மனுக்கு கூழ்வார்த்தல், மக்கள் நலம்பெற மஞ்சள் நீராடும் புனித பொங்கல் இடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதேப்போல இந்த ஆண்டும் இத்தகைய விழாவுக்காக பிரம்மசாரியார் ஞானபீடம் முழுவதும் மின்விளக்குகளாலும், வண்ணத் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

வருகிற 9ந்தேதி சனிக்கிழமை காலை மங்கல இசையுடன் விழா நிகழ்ச்சிகள் துவங்குகிறது. அதிகாலை 4.30 மணிக்கு ஆதித்தாய்க்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. ஸ்ரீ ஆதி மகாகணபதி, சக்தி சமேதஆதிலிங்க ஈஸ்வரன், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ வள்ளி தெய்வசேனா சுப்பிரமணிய சுவாமி ஆகிய சன்னதிகளில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. காலை 7.30 மணிக்கு கணபதி ஹோமம், 108 கலச வேள்வி பூஜையை ஞானபீட பிரம்மச்சாரியார் ஸ்ரீ சுவாமிவேல் சுவாமிஜி தலைமை தாங்கி துவக்கி வைக்கிறார்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 4.30 மணிக்கு ஆதித்தாய்க்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. கோமாதாபூஜை, வேளாங்கன்னி மாதாவுக்கு சிறப்புபூஜை, துளுக்கநாச்சியார் சிறப்பு வழிபாடு, தீச்சட்டி மற்றும் மாவிளக்கு ஏற்றுதல் ஸ்ரீ மேளதாள முழங்க, அம்மன் கிரக அலங்காரம் கங்கையில் இருந்து புறப்படுதல், அம்மனுக்கு கூழ்வாத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மாலை 3 மணிக்கு மக்கள் நலம் பெற மஞ்சள் நீராடும் புனித பொங்கல் இடுதல் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி,இன்னிசை நிகழ்ச்சி, தெருகூத்து போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஞானபீட நிறுவனர் ஆ.பெருமாள் தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.