தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அண்ணாமலைப் பல்கலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்.1-ல் தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ் (MBBS), பிடிஎஸ் (BDS) படிப்புகள் ஆகியவற்றில் சேருவதற்கான கவுன்சிலிங் கடந்த ஜூன் 25-ம் தேதி நடைபெற்றது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2014, 3:12 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்.1-ம் தேதி முதல் தொடங்குகிறது என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ் (MBBS), பிடிஎஸ் (BDS) படிப்புகள் ஆகியவற்றில் சேருவதற்கான கவுன்சிலிங் கடந்த ஜூன் 25-ம் தேதி நடைபெற்றது. கலந்தாய்வு மாணவ, மாணவியர்கள் பிளஸ்டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் படியும் மற்றும் தமிழகஅரசு இடஒதுக்கீடு விதிப்படியும் நடைபெற்றது. கலந்தாய்வில் அனுமதி சேர்க்கை ஆணை பெற்ற அனைத்து (எம்பிபிஎஸ் 150 இடங்கள், பிடிஎஸ் 100 இடங்கள்) மாணவ, மாணவியர்கள் அனுமதி சேர்க்கை செய்தனர். மேற்கண்ட மாணவ, மாணவியர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வருகிற செப்.1-ம் தேதி முதல் தொடங்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.