47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாகை மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்

நாகை அக்கரைப்பேட்டை மற்றும் கீச்சாங்குப்பம் ஆகிய மீனவக் கிராமங்களிலிருந்து 5 விசைப் படகுகளில் கடலுக்குள் சென்ற நாகை மீனவர்கள் 40 பேரும், பைபர் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை,

News image
Updated On :6 ஆகஸ்ட் 2014, 2:31 pm

சங்கர்

இலங்கைக் கடற்படையின் கைது நடவடிக்கையைக் கண்டித்து நாகை மீனவர்கள் மேற்கொண்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் புதன்கிழமை கைவிடப்பட்டது.

நாகை அக்கரைப்பேட்டை மற்றும் கீச்சாங்குப்பம் ஆகிய மீனவக் கிராமங்களிலிருந்து 5 விசைப் படகுகளில் கடலுக்குள் சென்ற நாகை மீனவர்கள் 40 பேரும், பைபர் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை, விழுப்புரம் மாவட்ட மீனவர்கள் 10 பேரும் கடந்த 28-ம் தேதி இரவு இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இலங்கைக் கடற்படையினரின் கைது நடவடிக்கையைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரியும் நாகை அக்கரைப்பேட்டை மற்றும் கீச்சாங்குப்பம் மீனவக் கிராமத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்து கடந்த 29-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். ஜூலை 29-ம் தேதி முதல்  செவ்வாய்க்கிழமை வரை 8 நாள்களாக நீடித்த இந்த வேலை நிறுத்தப் போராட்டம், புதன்கிழமை வாபஸ் பெறப்பட்டது.

மீன்பிடித் தடைக்காலத்தால் ஏற்கெனவே 45 நாள்கள் மீன்பிடிப்பு மேற்கொள்ளப்படாமலிருந்த நிலையில், இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதைக் கருத்தில் கொண்டும்,  மீனவர்களை மீட்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கையுடனும் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டதாக மீனவப் பஞ்சாயத்தார் தெரிவித்தனர்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த விசைப் படகு மீனவர்கள் புதன்கிழமை காலை முதல் வழக்கம் போல கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.