அரசு அலுவலர் மீது தாக்குதல்: ஆட்டோ டிரைவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் வே.தங்கபார்த்திபன் (37). இவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரிந்து


ஸ்ரீவில்லிபுத்தூரில் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியரை இரும்புக் கம்பியால் தாக்கி காயப்படுத்திய ஆட்டோ டிரைவரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் வே.தங்கபார்த்திபன் (37). இவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் ரயில் நிலையத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் தாலுகா அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது பின்னால் வந்த ஆட்டோ இவரது இரு சக்கர வாகனத்தின் மீது இடித்துள்ளது. ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று ஆட்டோ டிரைவரிடம் கேட்ட போது, அவர் தங்கபார்த்திபனை இழி சொற்களால் பேசி, இரும்புக் கம்பியால் தலையில் அடித்துள்ளார். இதில் தங்கபார்த்திபன் காயமுற்றார்.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் தங்கபார்த்திபன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆட்டோ டிரைவர் ஆண்டாள்புரத்தைச் சேர்ந்த க.கார்த்திகேயன் (24) என்பவரைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...