கட்டடத் தொழிலாளி பலி
விருதுநகர் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்குச் சொந்தமான பழைய வீட்டை இடித்து புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. பொட்டல்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன்


விருதுநகரில் பழைய வீட்டை இடித்தபோது மேல் தளத்திலிருந்து தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
விருதுநகர் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்குச் சொந்தமான பழைய வீட்டை இடித்து புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. பொட்டல்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் சுந்தரம் (55), அன்னை சிவகாமி புரத்தைச் சேர்ந்த நடராஜன் (63) ஆகியோர் வீட்டின் மேல் தளத்தில் ஏணியில் நின்று வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, எதிர் பாராத விதமாக மேற்தளத்திலிருந்த காரை பெயர்ந்து விழுந்துள்ளது. இதில் கீழே விழுந்த சுந்தரம், நடராஜனும் கால் தடுமாறி கீழே விழுந்தனர். இதில், தலையில் பலத்த காயமடைந்து சுந்தரம் உயிரிழந்தார். லேசான காயங்களுடன் நடராஜன் தப்பினார்.
இதுகுறித்து, விருதுநகர் பஜார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...