மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் சிதம்பராபுரம் கிராம மக்கள் மற்றும் இந்து முன்னணி சார்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2014, 12:20 pm

முத்துகுமார்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் சிதம்பராபுரம் கிராம மக்கள் மற்றும் இந்து முன்னணி சார்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிதம்பராபுரம் ஊர்ப் பெயரை அரசு பதிவேடுகளிலும், அரசு அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்குப் பின்பும் அதனை நடைமுறைப்படுத்த மறுக்கும் திருநெல்வேலி ஆட்சியரைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு விஸ்வஹிந்து பரிஷத் மாவட்டப் பொறுப்பாளர் டி.செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார்.  நெல்லை மாநகர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் டி.பாலாஜி கிருஷ்ணசுவாமி வரவேற்றார். ஏ.பி.வி.பி. தேசியச் செயலர் ஆர்.ராஜ்குமார் முன்னிலை வகித்தார். இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், விஸ்வஹிந்து பரிஷத் மாநில பொருளாளர் பெரியகுழைக்காதர், பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் மு.பாலசுப்பிரமணியன், இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கா.குற்றாலநாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

போராட்டத்தில் பங்கேற்ற சிதம்பராபுரம் கிராம மக்கள் கூறுகையில், அரசின் அ பதிவேடு உள்ளிட்டவற்றில் சிதம்பராபுரம் என்றே உள்ளது. அப்படியிருக்கையில் அந்தப் பெயரை நடைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் தயங்குவது வியப்பாக உள்ளது. இந்தப் பிரச்னையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த சிதம்பராபுரம் என்ற பெயரே தொடர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணியின் நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் எஸ்.தங்கமனோகர், பா.ஜ.க. மாவட்டத் தலைவர் கட்டளை எஸ்.ஜோதி, சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.