நெல்லையில் மறியல்:732 பேர் கைது
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மறியல் போராட்டம் நடைபெறும் என


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் சாலைமறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி, சத்துணவுப் பணியாளர்கள் 732 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள் திருநெல்வேலி சந்திப்பில் திங்கள்கிழமை காலையில் திரண்டனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசின் சத்துணவு வழங்கும் பணியில் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், சமையல் உதவியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் அனைவரையும் முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து ஊதியக் குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விளக்கி முழக்கமிட்டனர்.
போராட்டத்திற்கு கூட்டமைப்புத் தலைவர் ஆர்.ராசையா தலைமை வகித்தார். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ஜி.ஏசாயாகுருபாதம், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வி.ரத்தினம், பி.காசியம்மாள், தாவீதுதர்மராஜ், முருகையா, திரிபுரநாராயணன், சிவஞானம், ஆறுமுகம், இசக்கியப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு சத்துணவு பணியாளர் ஒன்றிய மாநிலச் செயலர் எஸ்.பழனிச்சாமி, வி.பார்த்தசாரதி எம்.எஸ்.மந்திரம், த.பத்மநாபன், க.துரைசிங், ச.ஈனமுத்து, மு.குருசந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
பின்னர் திருநெல்வேலி-மதுரை சாலையில் மறியல் செய்ய முயன்றவர்களை, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் கைது செய்தனர். மொத்தம் 732 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...