பழனி மலைக்கோயில் ரோப்கார் பராமரிப்புப் பணிகள் தீவிரம்
பழனி மலைக்கோவிலை இரண்டு நிமிட நேரத்தில் பக்தர்கள் சென்றடையும் வகையில் கடந்த 2004ம் ஆண்டு அமைக்கப்பட்ட ரோப்கார் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த ரோப்கார் தினமும் ஒரு


பழனி மலைக்கோயில் ரோப்கார் ஒருமாத பராமரிப்பு முன்னிட்டு தீவிரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு சீர்செய்யப்பட்டு வருகிறது.
பழனி மலைக்கோவிலை இரண்டு நிமிட நேரத்தில் பக்தர்கள் சென்றடையும் வகையில் கடந்த 2004ம் ஆண்டு அமைக்கப்பட்ட ரோப்கார் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த ரோப்கார் தினமும் ஒரு மணி நேரமும், மாதம் ஒரு நாளும், வருடத்தில் ஒரு மாதமும் நிறுத்தப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதன்படி கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி வாக்கில் பழனி மலைக்கோயில் ரோப்கார் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
ரோப்கார் நிறுத்தத்தால் வின்ச் மட்டுமே பக்தர்கள் பயன்படுத்தி வருவதால் வின்ச் நிலையத்தில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ரோப்காரின் பெட்டிகள், பேரிங்குகள், சாப்ட்டுகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய உதிரி பாகங்கள் கழற்றி சீர் செய்யப்பட்டது. பழுதடைந்த உதிரிபாகங்கள் உடனடியாக மாற்றப்பட்டது. மேலும், மலைக்கோயில் மேலே உள்ள தளத்தில் சிறிய சக்கரங்கள் முதல் பெரிய சக்கரங்கள் வரை அனைத்தும் கழற்றி பேரிங் மாற்றப்பட்டு வடக்கயிற்றில் இணைக்கப்பட்டது. மலைப்பாதையில் உள்ள சுமார் 75 அடி உயர டவரில் உள்ள சக்கரங்கள் அனைத்தும் கழற்றி புதிய புஷ்கள் மாற்றப்பட்டது.
ரோப்கார் பெட்டிகள் சீரமைக்கப்பட்டு, புதியவர்ணம் பூசப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இருக்கைகளில் புதிதாக குஷன்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மேல்தளம் மற்றும் கீழ்தளத்தில் உள்ள மோட்டார்கள், வடக்கயிறுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இப்பணியில் 15க்கும் மேற்பட்ட பணியாளர்கள், பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகள் விரைவில் சீர்செய்யப்பட்டு 20ம் தேதிக்கு மேல் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...