இவர்கள் கண்ட புதிய சர்க்யூட்டில் ஃபஸி கண்ட்ரோலர், அல்காரிதம் கடினபொருள் ஆகியவை அடங்கியுள்ளன. மேலும் மேக மூட்டத்திலும், மரங்கள் மறைத்தாலும் சூரிய ஒளி குறைந்தாலும் அதனை முழுமையாக பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும். அதற்காக புதிய ஃபஸி லாஜிக் ஸிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.மத்திய அரசு நிதியுதவியுடன் கலசலிங்கம் பல்கலைக்கழக சர்வதேச ஆராய்ச்சிக் கூடத்தில் புதிய சூரிய ஒளி மின்சக்தி ஆராய்ச்சியில் ஈடுபடும் பேராசிரியர்களை, வேந்தர் க.ஸ்ரீதரன், துணை வேந்தர் டாக்டர் எஸ்.சரவணசங்கர், பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் ஆகியோர் பாராட்டினர்.