தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கிராமசபை கூட்டத்தில் மதுக்கடைகடைகளை மூட தீர்மானம் நிறைவேற்ற மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தல்

மதுவிலக்கை அமல்படுத்த கிராமசபைகளுக்கு அதிகாரம் உண்டு என்பதால் சுதந்திர தினத்தன்று நடைபெறவுள்ள கிராமசபை கூட்டங்களில் டாஸ்மாக் மதுபானக்கடைக

News image
Updated On :13 ஆகஸ்ட் 2014, 2:41 pm

ஜி.சுந்தரராஜன்

மதுவிலக்கை அமல்படுத்த கிராமசபைகளுக்கு அதிகாரம் உண்டு என்பதால் சுதந்திர தினத்தன்று நடைபெறவுள்ள கிராமசபை கூட்டங்களில் டாஸ்மாக் மதுபானக்கடைகளை அரசு மூட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என ஊராட்சி தலைவர்களுக்கு மக்கள் சக்தி இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து மக்கள் சக்தி இயக்கத் தலைவர் பேராசிரியர் முனைவர் ஏ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நடைபெறுகின்ற 15 சதவீத கொலைகளுக்கும், குடிப்பழக்கமே காரணமம் என புள்ளவிபரம் தெரிவிக்கிறது. 10 முதல் 20 சதவீதம் பேர் குடியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 முதல் 35 சதவீதம் வரை தற்கொலைகளுக்கும், 50 சதவீதத்திற்கு மேல் சாலை விபத்துகளுக்கும் குடிப்பழக்கமே காரணாகிறது. இப்படி தனிமனிதன், அவர் குடும்பம் மற்றும் சமுதாயத்தையும் அழிக்கின்ற குடியை ஒழிக்க காந்தியடிகள் மதுவிலக்கு கொள்கையை எடுத்துக் கொண்டு போராடினார். தன்னுடைய 18 அம்சங்கள் அடங்கிய தீர்மான திட்டத்தில் மூன்றாவது அம்சமாக மதுவிலக்கை வைத்திருந்தார். அரசு வழிகாட்டுக் கொள்கையில் 47-வது பிரிவில் மதுவிலக்க கொள்கையை அமல்படுத்துவது அரசின் கடமையாகும்.

மதுவிலக்கை அமல்படுத்த கிராம பஞ்சாயத்துக்கு அதிகாரம் உண்டு: இந்திய ஜனநாயக அமைப்பில் கிராம பஞ்சாயத்திற்கும், கிராமசபையும் அடித்தளமாக அமைந்திருக்கிறது. பஞ்சாயத்து சட்டத்தில் இவைகளுக்கு தக்க அதிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆகையால் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்களுக்கு தங்கள் கிராமங்களில் வாழ்கின்ற ஏழை மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது. சமுதாயத்தை மாற்றி அமைக்கும் அதிகாரமும், சக்தியும் கிராமசபையிடமே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நடக்க இருக்கும் கிராமசபை கூட்டத்தில் தங்கள் பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அரசு மூட வேண்டுமென்றும், புதிய டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என தீர்மானங்களை நிறைவேற்றி தமிழகஅரசுக்கு அனுப்பி வைக்குமாறு, அனைத்து பஞ்சாயத்து தலைவர்களையும் மக்கள் சக்தி இயக்கம் கேட்டுக்கொள்கிறது என அறிக்கையில் ஏ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.