பழனி கோயிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பழனி மலைக்கோயிலுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


பழனி மலைக்கோயிலுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சமீபத்தில் பல்வேறு இந்துக்கோயில்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் ஏராளமான இந்து அமைப்பின் நிர்வாகிகள் மீதும் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுக்க போலீஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தின் முதன்மைக் கோயிலான பழனியில் கடந்த சிலதினம் முன் திண்டுக்கல் எஸ்பி., ஜெயச்சந்திரன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிவுரைகள் வழங்கி விட்டு சென்றார். இந்நிலையில் புதன்கிழமை கோயிலில் பல்வேறு இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பழனி மலைக்கோயிலில் படிவழிப்பாதை, வின்ச் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு பக்தர்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மலைக்கோயில் படிவழிப்பாதை, வின்ச் மேல்தளங்களில் டோர்பிரேம் மெட்டல் டிடெக்டர்கள் கடந்த சிலதினங்களுக்கு முன் நிரந்தரமாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நுழைவாயிலிலேயே பக்தர்களிடம் உள்ள தீப்பெட்டிகள், சிகரெட், பீடிகள் பறிமுதல் செய்யப்படுகிறது. தவிர, இலவச தரிசன வரிசை, கட்டண தரிசன வரிசை, கருவறை முன்மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது. தவிர மலைக்கோயிலில் முன்னரே அலாரம் சிஸ்டம் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கேமராக்கள் மட்டுமன்றி திருக்கோயில் பாதுகாப்பு பணியாளர்களும் மெட்டல் டிடெக்டர் கொண்டு சந்தேகத்துக்கு இடமான பக்தர்களின் பைகளை ஆய்வு செய்து வருகின்றனர். காவல்துறை மற்றும் திருக்கோயில் நிர்வாகம் இணைந்து மலைக்கோயிலில் ராஜகோபுரம், தங்ககோபுரம் நிலைகளில் ஆயதமேந்திய போலீஸாருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்பணிகளை புதன்கிழமை டிஎஸ்பி., சண்முகம் ஆய்வு மேற்கொண்டார். அவர் கூறும்போது, தற்போதுள்ள அமைப்பு சுதந்திர தினத்துக்கு மட்டுமன்றி நிரந்தர பாதுகாப்பாக செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...