நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பழனியருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து ஒருவர் பலி: இருவர் படுகாயம்

தூத்துக்குடியில் இருந்து பேப்பர் வேஸ்ட் ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று பொள்ளாச்சிக்கு சென்றுள்ளது.  லாரியை தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் தாலுகா கொக்கரக்குடியை சேர்ந்த மாணிக்கம்

News image
Updated On :14 ஆகஸ்ட் 2014, 12:57 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விழுந்ததில் இருவர் படுகாயமடைந்தனர்.  லாரியில் லிப்ட் கேட்டு வந்தவர் பலியானார்.

தூத்துக்குடியில் இருந்து பேப்பர் வேஸ்ட் ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று பொள்ளாச்சிக்கு சென்றுள்ளது.  லாரியை தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் தாலுகா கொக்கரக்குடியை சேர்ந்த மாணிக்கம்(33) என்பவர் ஓட்டிக் கொண்டு வந்துள்ளார்.  லாரியில் கிளீனராக அதே ஊரை சேர்ந்த பரமசிவம்(33) உடன் வந்துள்ளார்.  மாணிக்கத்தின் உறவினர் பெருமாள் மகன் சிவானந்தபெருமாள்(37).  இவர் கேரள மாநிலம் கொச்சியில் தனியார் ஹோட்டலில் மாஸ்டராக வேலைபார்த்து வந்துள்ளார். இவர் கொச்சி செல்லயிருந்த நிலையில் லாரி பொள்ளாச்சி செல்வதால் பொள்ளாச்சி வரை லாரியில் வருவதாக கூறி அவர்களுடன் லாரியில் பயணம் செய்துள்ளார்.  லாரி வியாழக்கிழமை பழனி பைபாஸ் சாலையில் ராமநாதநகர் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.  இதில் சிவானந்தபெருமாள் சம்பவ இடத்திலேயே நசுங்கி இறந்து போனார்.  மாணிக்கம், பரமசிவம் ஆகியோர் பலத்த காயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.  இறந்து போன சிவானந்த பெருமாளுக்கு திருமணமாகி மனைவி, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளார்.  சம்பவ இடத்தில் மீட்புப்பணியில் போலீஸார், தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். 

விபத்து குறித்து அடிவாரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.