தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மத்திய அரசின் சமஸ்கிருத திணிப்பைக் கண்டித்து சிதம்பரத்தில் தெருமுனைக் கூட்டம்

மத்தியஅரசுப் பள்ளிகளில் “சமஸ்கிருத வாரம்” கொண்டாடும்  அரசின் முடிவுக்கு எதிராக சிதம்பரத்தில் தமிழ்க் காப்பணி அமைப்பு சார்பில் கண்டனதம் தெரிவித்து தெருமுனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2014, 12:21 pm

ஜி.சுந்தரராஜன்

மத்தியஅரசுப் பள்ளிகளில் “சமஸ்கிருத வாரம்” கொண்டாடும்  அரசின் முடிவுக்கு எதிராக சிதம்பரத்தில் தமிழ்க் காப்பணி அமைப்பு சார்பில் கண்டனதம் தெரிவித்து தெருமுனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் மேலவீதி அண்ணாசிலை அருகே நடைபெற்ற இக்கூட்டத்திற்கு  தமிழக் காப்பணி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் கி.வெங்கட்ராமன் தலைமை வகித்துப் பேசினார். தமிழக இளைஞர் முன்னணி தமிழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.குபேரன் வரவேற்றுப் பேசினார்.

தமிழ்க் காப்பணித் தலைவர் பேராசிரியர் அழ.பழநியப்பன், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் சி.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் அக்னிச் சிறகுகள் சேவை அமைப்பு செயலாளர் வே.சுப்ரமணிய சிவா, சிதம்பரம் அயோத்திதாசப் பண்டிதர் - சுவாமி சகஜாநந்தா ஆய்வு மைய நிர்வாகி பேராசிரியர் திரு.அ.அன்பாநந்தம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கூட்டத்தில் தமிழ் வழித் திருமண நெறியாளர் இறைநெறி இமயவன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மத்தியஅரசின் சமஸ்ருதத் திணிப்பைக் கண்டித்து சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பொதுமக்கள், தமிழ் உணர்வாளர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர்  மு.சம்பந்தம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.