பண்ருட்டி அருகே 11 கொத்தடிமைகள் மீட்பு

பண்ருட்டி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 6 குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரை வருவாய்துறையினர் மீட்டு கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Updated on
1 min read

பண்ருட்டி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 6 குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரை வருவாய்துறையினர் மீட்டு கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பண்ருட்டி மாளிகைமேடு பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. அதே பகுதியில் இவருக்கு சொதமான நிலம் உள்ளது. இவருடைய இடத்தில் விழுபுரம் மாவட்டம் பனையபுரம் துறவி கிராகிராமத்தைம்சேர்ந்த அன்வர் என்பவர் குத்தகைக்கு எடுத்து செங்கல் சூளை நடத்தி வருகிறார். இதில் விழுபுரம் ஆதனூரை சேர்ந்த மணிகண்டன்(35), அவருடைய மனைவி கனிதா(30), அதே பகுதியைச் சேர்ந்த செல்வராசு(30), மனைவி இந்திரா(28), செஞ்சி தாலுகா திருக்கை மாத்தூர் கிராமத்தை சேர்ந்த குமார்(37), அவருடைய மனைவி ஜெயந்தி (26),இவர்களுடைய குழந்தை புனிதா(5), வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டம் எஸ் கௌத்தூரை சேர்ந்த நாகப்பன்(35),அவருடைய மனைவி நாகவள்ளி, மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த செல்லப்பன்(40) அவருடைய மனைவி மஞ்சு(31), முருகேசன்(40),மனைவி சரஸ்வதி ஆகியோர் கொத்தடிமைகளாக பணிபுரிந்தனராம். இவர்களுக்கு குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் மட்டும் கொடுத்து, கடந்த ஒரு வருடமாக சம்பளம் கொடுக்காமலும், சரியான சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை அன்வர் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் இவர்கள் தங்கும் பகுதியில் மின் இணைப்பை துண்டித்துவிடுவாராம்.

இது தொடர்பாக கடலூர் கோட்டாசியர் சர்மிளா உத்தரவின் பேரில் பண்ருட்டு வட்டாசியர் மோகன், ஆர்.ஐ ராஜூ, கிராம நிர்வாக அலுவலர் குப்புசாமி மற்றும் பண்ருட்டி போலீஸாருடன் சென்று சூலையில் கொத்தடிமைகளாக பணியாற்றிய 11 பேரை மீட்டனர். பின்னர் அனைவரும் கோட்டாசியர் அலுவலகத்தில் அனுப்பிவைக்கப்பட்டனர்.இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com