நெல்லையில் சுதந்திர தின விழாவில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில், பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் தேசியக் கொடியை ஏற்றி முடித்ததும்,


திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திரதின விழாவில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்ற இளைஞரால் மைதானம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில், பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் தேசியக் கொடியை ஏற்றி முடித்ததும், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க தயாரானார். அப்போது பார்வையாளர் வரிசையில் இருந்து உடலில் பெட்ரோல் ஊற்றியபடி இளைஞர் ஒருவர் ஆட்சியரை நோக்கி ஓடி வந்தார். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த இளைஞரை போலீஸார் தடுத்து நிறுத்தி தூக்கிச் சென்று அருகில் இருந்த குடிநீர்த் தொட்டியில் குளிப்பாட்டினர். அப்போது தான் விஷமும் குடித்து வந்திருப்பதாக அந்த இளைஞர் கூறியதையடுத்து, உடனடியாக மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விசாரணையில் அந்த இளைஞர் திருநெல்வேலி அருகே உள்ள மேலநத்தத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் ஐயப்பன் (32) என்பது தெரியவந்தது. குடும்பத்தகராறு காரணமாக அவர் தீக்குளிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அது உண்மையான காரணம்தானா அல்லது வேறு ஏதேனும் உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...