ஸ்ரீவில்லிபுத்தூரில் கழிவு பஞ்சு வியாபாரி கொலை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கழிவு பஞ்சு வியாபாரி வெள்ளிக்கிழமை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கழிவு பஞ்சு வியாபாரி வெள்ளிக்கிழமை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
ராஜபாளையம், வடக்கு மலையடிபட்டியைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் தலக்குத்தேவர் (48). இவருக்கு லீலா, காசியம்மாள் என்ற இரு மனைவிகள் உண்டு. தலக்குத்தேவரும், காசியம்மாளும் சிவ பக்தர்கள். கழிவுப் பஞ்சு வியாபாரம் செய்து வந்த தலக்குத்தேவர் தனது இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 1 மணியளவில் கொத்தங்குளம்-முத்துலிங்காபுரம் சாலையில் வந்து கொண்டிருந்துள்ளார். மோலயநாயக்கர் காடு அருகே இவர் கொடூரமான முறையில் பல இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் வன்னியம்பட்டி போலீஸார் விரைந்து சென்று தலக்குத்தேவரின் சடலத்தைக் கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியைத் தேடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...