நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

ஜெயங்கொண்டத்தில் பெண் மரணத்தில் சந்தேகம்: கணவனை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரகுடி கிராமத்தை சேர்த தம்புசாமி மகள் சரஸ்வதி (25) இவருக்கும் தேவமங்கலம் கிராமத்தை சேர்ந்த  கந்தன் மகன் அன்பரசன் (32) இருவருக்கும்  கடந்த 2006ம் ஆண்டு திருமணம் நடந்தது இவர்களுக்கு 2 மகன் 1 மகள் உள்ளனர். ]இவர்கள் தற்போது ஜெயங்கொண்டத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டை நடந்து வந்துள்ளது.

Updated On :5 ஜனவரி 2024, 12:00 pm IST

ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரகுடி கிராமத்தை சேர்த தம்புசாமி மகள் சரஸ்வதி (25) இவருக்கும் தேவமங்கலம் கிராமத்தை சேர்ந்த  கந்தன் மகன் அன்பரசன் (32) இருவருக்கும்  கடந்த 2006ம் ஆண்டு திருமணம் நடந்தது இவர்களுக்கு 2 மகன் 1 மகள் உள்ளனர். ]இவர்கள் தற்போது ஜெயங்கொண்டத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டை நடந்து வந்துள்ளது.

நேற்று இரவும் இருவருக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. இந்நிலையில் சரஸ்வதி வீட்டின் சன்னலில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது சரஸ்வதியை அவரது கணவர் அன்பரசன் தான் கொலை செய்தார் என சரஸ்வதியின் உறவினர்கள் குற்றம்சாட்டி அவரை கைது செய்ய வலியுறுத்தினர்.

மேலும் அவர்கள் சரஸ்வதியின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பும் ஜெயங்கொண்டம் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் சாலை  மறியல் செய்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.