பழனியில் பேருந்தில் ஏறி ரகளை செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு
பழனியில் பேருந்தில் ஏறி ரகளை செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


பழனியில் பேருந்தில் ஏறி ரகளை செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பழனி மதினாநகரை சேர்ந்தவர்கள் கமாலுதீன் மகன் மீராமைதீன்(22), சேக் முகமது மகன் தமீம்அன்சாரி(19), ரகுமான் மகன் சதாம்உசேன்(19). இவர்கள் மூன்று பேரும் ஞாயிற்றுக்கிழமை இரவு விரிவாக்கம் செய்யப்பட்ட பேருந்து நிலைய ரவண்டானா அருகே நின்று கொண்டு பழனியில் இருந்து ருத்ராபாளையம் செல்லும் தனியார் பேருந்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது பேருந்தின் நடத்துனர் கார்த்திக்குமார் இங்கு பேருந்து நிற்காது, தள்ளி நிற்கும் என கூறிய போது மூன்று பேரும் அவரை ஆபாசமாக திட்டிவிட்டு பேருந்தை தடுத்து நிறுத்தி ஏறியுள்ளனர். மேலும் பேருந்தில் இருந்த கண்ணாடிகளை உடைத்து தகராறு செய்து கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து பேருந்தின் நடத்துனரான மானூர் தெற்கு தெருவை சேர்ந்த வேலுச்சாமி மகன் ஆறுமுகம்(45) பழனி டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...