மத்திய தில்லியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த பெண்மணிக்கு சிசிக்சை அளிக்கச் செவிலியரை பாலியல் பலாத்காரம் செய்த்ததாக, அந்த ஹோட்டலின் ஊழியர்கள் நீரஜ்(25), ராஜன் (23) இருவரையும் தில்லி போலீஸôர் கைது செய்தனர்.
இது குறித்து தில்லி போலீஸ் உயர் அதிகாரி கூறியது:
ஹோட்டல் உரிமையாளர், இருதய நோய்க்கு சிகிச்சைப் பெற்று வரும் அவரது வயதான மனைவியை (80) கவனித்துக் கொள்வதற்காக இரு இளைஞர்களையும், திபெத்தைச் சேர்ந்த செவிலியரையும் இரு மாதங்களுக்கு முன் பணியில் அமர்த்தியுள்ளார். அந்த செவிலியர் அவரது கணவருடன் வடக்கு தில்லியில் வசித்து வருகிறார்.
இந் நிலையில், வயதான பெண்மணிக்கு சிசிக்சை அளிக்க கடந்த வெள்ளிக்கிழமை (ஆக.15) ஹோட்டலுக்கு வந்த அந்த செவிலியரை, இரு இளைஞர்களும் அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பாலியல் பலாத்காரம் குறித்து வெளியில் சொல்லக் கூடாது என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, வீட்டுக்கு திரும்பிய அந்த செவிலியர் அவரது கணவரிடம் பாலியல் பலாத்காரம் குறித்து தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில், செவிலியருக்கு நடத்தப்பட்ட பாலியல் பலாத்காராம் தொடர்பாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதுடன், அந்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (04.08.2026) 12 ராசிகளுக்கும்! தனுசு ராசிக்கு?
ஆங்கில குற்றத்தொடா் பாணியில் மனைவி கொலை: கணவா் கைது

கானா: கோகோ விவசாய நில பயன்பாட்டை மாற்றினால் 20 ஆண்டுகள் சிறை

நீட் வினாத்தாள் தயாராகும் முறையை விளக்கத் தயாா்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


