மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விநாயகர் சதுர்த்தி:நெல்லையில் 200 சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தி விழா திருநெல்வேலி மாநகரில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. வீடுகளில் வைக்கப்படும் சிறிய சிலைகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் திருநெல்வேலி மாநகர

News image
Updated On :29 ஆகஸ்ட் 2014, 12:43 pm

முத்துகுமார்

விநாயகர் சதுர்த்தி விழா திருநெல்வேலி மாநகரில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. வீடுகளில் வைக்கப்படும் சிறிய சிலைகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் திருநெல்வேலி மாநகர எல்லைக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

ஆவணி மாதம் வளர்பிறையில் வரும் சதுர்த்தி நாள் விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் இந்த நாளில் கோயில்கள், வீடுகளில் புதிதாக களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வார்கள். பின்னர் விநாயகருக்கு உகந்த அருகம்புல், கொழுக்கட்டை படைத்து வழிபடுவார்கள்.தொடர்ந்து 3 முதல் 11 நாள்கள் வரை வழிபட்டு, களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை நீர்நிலைகளுக்கு எடுத்துச்சென்று கரைப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி திருநெல்வேலி மாநகரில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட சிலைகளும், மாவட்ட முழுவதும் மொத்தம் 600-க்கும் மேற்பட்ட சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர்.

மணிமூர்த்தீஸ்வரம்: திருநெல்வேலியில் தாமிரவருணி நதிக்கரையில் உள்ள 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சுவாமி வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். சிறப்பு அபிஷேகத்துக்கு பின்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

மேலப்பாளையம் மண்டலத்துக்கு உள்பட்ட குறிச்சியில் சொக்கநாதர் கோயில் தெருவில் பா.ஜ.க. சார்பில் 26 ஆண்டாக நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில், விக்ன விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலையில் மகாவிநாயகர் எழுந்தருளல், பூஜை, காவிக்கொடி ஏற்றுதல், வீடுகளில் பூஜைக்கு சிறிய விநாயகர் வழங்குதல், கூட்டுப்பிரார்த்தனை, அலங்கார பூஜை ஆகியவை நடைபெற்றன. மழைவளம் பெருக வேண்டி மாலையில் மகாவேள்வி நடைபெற்றது. இரவில் பெயர் நட்சத்திர அர்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து கோ பூஜை, கோலப்போட்டிகளும் நடைபெற்றன. சனிக்கிழமை (ஆக. 29) காலையில் அகவல் பாராயணம், சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பிற்பகலில் மகாஅன்னதானமும், மாலையில் வீடுகளில் பூஜை செய்த 111 விநாயகர் வீதியுலா வருதலும் நடைபெறுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் மு.பாலசுப்பிரமணியன், செல்வம், பழனி, மாரியப்பன், சுந்தர், ராஜ் உள்ளிட்டோர் செய்து வருகிறார்கள்.

தியாகராஜநகர்:பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள விக்ன விநாயகர் கோயிலில் 26 ஆவது ஆண்டு சதுர்த்தி விழா, 18 ஆவது ஆண்டு தேர்த்திருவிழா ஆகியவை கடந்த 20 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தேரோட்டம் வியாழக்கிழமை மாலையில் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலையில் கும்பபூஜை, யாகசாலைபூஜை, பூர்ணாஹீதி, சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை, பக்திச்சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றன.

இதேபோல வண்ணார்பேட்டையில் உள்ள பேருந்துவிநாயகர் கோயில், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள செல்வவிநாயகர், கல்யாண விநாயகர், சுவாமி நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் உள்ள விநாயகர் சன்னதி உள்ளிட்டவற்றிலும் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ரோந்து பணி அதிகரிப்பு: விநாயகர் சதுர்ததி பாதுகாப்பு குறித்து போலீஸார் கூறுகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர கோயில் நிர்வாகங்கள் சார்பில் 5 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்துப் பகுதிகளிலும் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் விசர்ஜன ஊர்வலத்தில் அனைத்து அமைப்பினரும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதையில் செல்வதோடு, பொதுஅமைதிக்கு ஒத்துழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.