காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கல்லால் தாக்கி முதியவர் கொலை

திருநெல்வேலி அருகேயுள்ள புதுக்குளம் சி.எஸ்.ஐ. சர்ச் தெருவைச் சேர்ந்த ஆபிரகாம் மகன் செல்லையா (85). விவசாயி. இவருக்கும், இவரது அண்ணன் ராஜாமணியின் மகன் பொக்கிஷம்

News image
Updated On :31 ஆகஸ்ட் 2014, 1:34 pm

முத்துகுமார்

திருநெல்வேலி அருகேயுள்ள புதுக்குளத்தில் கல்லால் தாக்கி முதியவர் ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது அண்ணன் மகனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி அருகேயுள்ள புதுக்குளம் சி.எஸ்.ஐ. சர்ச் தெருவைச் சேர்ந்த ஆபிரகாம் மகன் செல்லையா (85). விவசாயி. இவருக்கும், இவரது அண்ணன் ராஜாமணியின் மகன் பொக்கிஷம் என்பவருக்கும் சொத்துத்தகராறு இருந்து வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆனால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லையாம்.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை புதுக்குளம் பகுதியில் செல்லையா நின்று கொண்டிருந்தபோது அவருக்கும், பொக்கிஷத்திற்கும் தகராறு ஏற்பட்டதாம். இதில் கல்லால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த செல்லையா இறந்தார்.

தகவலறிந்த முன்னீர்பள்ளம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். செல்லையாவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.