விருதுநகர் மாவட்ட பேரூராட்சிகள், மதுரை மண்டலத்துடன் செப்.1 முதல் இணைப்பு
தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கத்தின் நீண்ட கால கோரிக்கையை அரசு ஏற்று நிர்வாக வசதிக்காக சிவகங்கை மண்டலத்துடன் இணைந்திருந்த விருதுநகர் மாவட்டத்தை, மதுரை


தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கத்தின் நீண்ட கால கோரிக்கையை அரசு ஏற்று நிர்வாக வசதிக்காக சிவகங்கை மண்டலத்துடன் இணைந்திருந்த விருதுநகர் மாவட்டத்தை, மதுரை மண்டலத்துடன் செப்டம்பர் 1-ம் தேதி முதல் இணைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கனா பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகம் சிவகங்கையில் ஆரம்ப முதல் செயல்பட்டு வந்தது. இதனால் அதிகாரிகள் சுமார் 150 கி.மீ. தூரமுள்ள விருதுநகர் மாவட்டத்தின் கடைசி பகுதி வரை நேரில் வந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது மற்றும் இங்குள்ள அலுவலர்கள் சிவகங்கை சென்று அலுவலகப் பணிகளை மேற்கொள்வது நடைமுறையில் காலதாமதம் நிறைந்ததாக இருந்தது.
விருதுநகர் மாவட்டத்தில் 9 பேரூராட்சிகள் 95.740 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ளது. நிர்வாகத் திறன் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கும் சேவைத் தரம் மேம்படும் வகையில் விருதுநகர் மாவட்டத்தை அருகில் உள்ள மதுரை மண்டலத்துடன் இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் இதன் மாநில துணைத் தலைவர் ஆ.காமராஜ், பேரூராட்சிகளின் இயக்குநர் மற்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து, பேரூராட்சிகளின் இயக்குநர் ராஜேந்திர ரத்னுவின் பரிந்துரையின் பேரில், செப்டம்பர் 1-ம் தேதி முதல் விருதுநகர் மாவட்டத்தை மதுரை மண்டலத்துடன் இணைத்து உத்தரவிட்டுள்ளது. அரசின் முடிவிற்கு தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம், தமிழக முதல்வர் மற்றும் துறையின் அமைச்சர் மற்றும் இயக்குநருக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...