விருதுநகர் அருகே வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து உள்ளே பொருள்களை தெருவில் தூக்கியெறிந்து சூறையாடியதாக உரிமையாளர் உள்பட 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டியன்(40). இப்பகுதியைச் சேர்ந்த மதியழகன் என்பவரின் வீட்டில் ஒத்திக்கு குடியிருந்து வந்தார். இந்நிலையில் வீட்டை உடனே காலிசெய்து தரும் படி தகராறு செய்தாராம். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஏற்கனவே இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
] இந்நிலையில் வியாழக்கிழமை இரவு மதியழகன் அவரது மனைவி பாலா உள்ளிட்ட உறவினர் 5 பேர் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து தகாத வார்த்தைகள் பேசியதோடு, அங்கிருந்த பொருள்கள் அனைத்தையும் வெளியே தெருவில் வீசியெறிந்து சூறையாடினார்களாம். இது தொடர்பாக பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் தங்கப்பாண்டியன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் மதியழகன் அவரது மனைவி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!
தமிழகம் வரும் ராகுல்! 3 மாவட்டங்களில் இன்று பிரசாரம்!

பொன்னேரி, அண்ணாநகரில் விஜய் இன்று பிரசாரம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

