தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வெறிநாய் கடித்ததில் 4 செம்மரி ஆட்டுக்குட்டிகள் சாவு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே செவ்வாய்கிழமை அதிகாலை  வெறிநாய் கடித்ததில் 4 செம்மரி ஆட்டுக் குட்டிகள் செத்தன. தொடர்ந்து நடைபெறும் சம்பவத்தால்

News image
Updated On :16 டிசம்பர் 2014, 2:14 pm

கிருஷ்ணமூர்த்தி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே செவ்வாய்கிழமை அதிகாலை  வெறிநாய் கடித்ததில் 4 செம்மரி ஆட்டுக் குட்டிகள் செத்தன. தொடர்ந்து நடைபெறும் சம்பவத்தால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மணப்பாறை அருகே உள்ள வடக்குசேர்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் விவசாயி. இவர் 30 செம்மரி ஆடுகள் வீட்டின் அருகே ஆட்டுக் கொட்டகை அமைத்து வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை அதிகாலை ஆடுகள் சத்தமிடுவதை அறிந்த செல்வராஜ் எழுந்து பார்த்த போது ஆட்டுக் கொட்டகையில் இருந்த ஆடுகளை இரண்டு வெறிநாய் கடித்துக் குதறியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போடவே வீட்டில் உள்ளவர்கள் எழுந்து வந்து நாய்களை விரட்டி அடித்தனர்.

பின்னர் கொட்டகையின் உள்ளே சென்று பார்த்த போது 4 செம்மரி ஆட்டுக் குட்டிகள்   பரிதாபமாக இறந்து கிடந்த்து. பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த மரவனூர் கால்நடை மருத்துவர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த ஆட்டுக்குட்டிகளை பிரேத பரிசோதனை செய்த பின் குழி  தோண்டி புதைத்தனர்.

கடந்த சில தினங்களில் மட்டும் வடக்குசேர்பட்டியில் வெறிநாய்கள் கடித்ததில் 18 ஆடுகள் பலியாகி உள்ளனர். தொடர்ந்து இதுபோன்று வெறிநாய்கள் ஆடுகளை வேட்டையாடி வருவதால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வடக்குசேர்பட்டியில் அதிக அளவில் கால்நடைகளை மட்டுமே மக்கள் நம்பி வாழுகின்ற நிலையில் இதுபோன்று அவ்வபோது ஆடுகள் இறக்கின்ற நிலையால் மக்கள் மிகவும் மன வேதனைக்கு ஆளாகி உள்ளனர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க வெறிநாய்களை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.