எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி திருநள்ளாறில் அலைமோதும் பக்தர்கள்

சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

News image
Updated On :16 டிசம்பர் 2014, 6:27 am

செல்வ முத்துகுமாரசாமி

சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பிற்பகல் 2.43 மணிக்கு சனிபகவான் பிரவேசமாவதையொட்டி காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு  ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை 4 மணிக்கு நடை திறந்தது முதல் நீண்ட வரிசையில் சென்று பக்தர்கள் ஸ்ரீ சனீஸ்வரபகவானை தரிசனம் செய்துவருகின்றனர்.

நளன் குளத்தில் நீராடி, கட்டண தரிசனம், தர்ம தரிசன வரிசை ஒவ்வொன்றிலும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் சென்றுகொண்டிருக்கின்றனர். சன்னதியில் பக்தர்கள் தேங்காத வகையில் போலீஸார், தரிசனம் செய்தவுடன் விரைவாக பக்தர்களை அனுப்புகின்றனர். இதனால் கோயிலுக்கு வெளியே நீண்ட நேரம் காத்திருப்பு குறையுமென போலீஸார் கூறுகின்றனர்.

புதுச்சேரி காவல்துறை ஐ.ஜி. பிரவீர்ரஞ்சன் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்றார். பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டுவருகிறது. பிற்பகல் சனிப்பெயர்ச்சி என்பதால் அப்போது முதல் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே இதை கருத்தில்கொண்டு பக்தர்கள் விரைவு தரிசனம் செய்து வெளியேற எல்லா நடவடிக்கைகளையும் கோயில் நிர்வாகம், காவல்துறை நிர்வாகம் எடுத்துள்ளது. பகல் 11.30 மணி வரை 3 லட்சம் பக்தர்களை கடந்துவிட்டதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.