ஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

தனியார் பெண்கள் விடுதியில உணவு சாப்பிட்ட 72 பேருக்கு வாந்தி மயக்கம்

திருச்சி காஜாமலை அருகேயுள்ள தனியார் பெண்கள் விடுதியில் புதன்கிழமை இரவு உணவு சாப்பிட்ட 72 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Updated On :17 டிசம்பர் 2014, 4:31 pm

திருச்சி காஜாமலை அருகேயுள்ள தனியார் பெண்கள் விடுதியில் புதன்கிழமை இரவு உணவு சாப்பிட்ட 72 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கே.கே.நகர் அருகேயுள்ள காஜாமலை, கேசவ நகரில் மினர்வா பெண்கள் விடுதி உள்ளது. இந்த விடுதியில், ஈ.வெ.ரா கல்லூரி, பாரதிதாசன் பல்கலைகழகம், சட்டக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் பயிலும் மாணவிகளும், பணிக்கு செல்லும் பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு இந்த விடுதியில் காலிப்பிளவர் கூட்டு, சாம்பார் சாதம் சாப்பிட்ட 72 பெண்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த கே.கே.நகர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று வாந்தி மயக்கத்தில் இருந்த பெண்களை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விடுதி உரிமையாளர் ராஜேந்திரனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.