தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மதுராந்தகம் இரயில் தண்டவாளத்தில் விரிச்சல்: இரயில்கள் காலதாமதம்

மதுராந்தகம் இரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிச்சல் காரணமாக, சரிச்செய்யப்பட்டு சுமார் 1 மணி நேரம் காலதாமதமாக, வியாழன்கிழமை காலை  இரயில்கள் சென்னை நோக்கி சென்றன்.

Updated On :19 டிசம்பர் 2014, 2:31 am

மதுராந்தகம் இரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிச்சல் காரணமாக, சரிச்செய்யப்பட்டு சுமார் 1 மணி நேரம் காலதாமதமாக, வியாழன்கிழமை காலை  இரயில்கள் சென்னை நோக்கி சென்றன்.

மதுராந்தகம் இரயில் நிலையத்தில் விழுப்புரம்--சென்னை பாசஞ்சர் இரயில் வந்து நின்றுவிட்டு, அதன் பின் கிளம்ப தயார் ஆகும்போது, சிக்னல் கிடைக்கவில்லை. இதுபற்றி இரயில்நிலைய மாஸ்டர் ஜாபரிடம் ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பின்பு மதுராந்தகம் ரயில் தண்டவாளங்களை சரி செய்யும் ஊழியர்கள் விரைந்து தண்டவாள பகுதிகளை ஆய்வு செய்தனர்.

அதில் இரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில விரிச்சல் ஏற்பட்டதை கண்டறிந்து அதனை சரி செய்தனர். அதன்பின்பு, விழுப்புரம்--சென்னை பாசஞ்சர் இரயில், சென்னை புதுச்சேரி இரயில் ஆகிய இரு இரயில்களும் சுமார் 1 மணி நேரம் காலதாமதத்துக்கு பின் சென்னை நோக்கி சென்றன.

இதனால் மதுராந்தகம் இரயில் நிலையத்திலிருந்து சென்னை நோக்கி செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.