6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவி உள்பட 3 பேர் தற்கொலை

பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவி உள்பட 3 பேர் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டனர்.

News image
Updated On :20 டிசம்பர் 2014, 12:38 pm

தர்மராஜ்

பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவி உள்பட 3 பேர் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டனர்.

பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரத்தை சேர்ந்தவர் சண்முகநாதன் மகன் கனகசபாபதி (47). இவருக்கு கடந்த சில மாதங்களாக தொடர் வயிற்று வலி இருந்ததாம். இதனால் அவதிப்பட்ட கனகசபாபதி பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றும் பலனளிக்கவில்லையாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வலியால் அவதிப்பட்ட அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து அவரது அண்ணன் கலைச்செல்வன் (42) அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

மனநலன் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி விஷம் குடித்து சாவு:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிவேல் மகள் கலையரசி (16). இவர், வேப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். மனநலன் பாதிக்கப்பட்ட கலையரசி கடந்த 17ம் தேதி மாலை அவரது வீட்டில் விஷம் குடித்தார். திட்டக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த கலையரசி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

இதுகுறித்து ஜோதிவேல் அளித்த புகாரின்பேரில், குன்னம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மலரழகன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

விஷம் குடித்து பெண் தற்கொலை:

குன்னம் அருகே உள்ள அந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கலையரசன் மனைவி செந்தாமரை (30). இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி அபிஷேக் (6), அனு ஷ்ரீ (4) ஆகிய குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த செந்தாமரை வெள்ளிக்கிழமை மாலை விஷம் குடித்தார். பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு இரவு உயிரிழந்தார்.

இதுகுறித்து கலையரசன் அளித்த புகாரின்பேரில், குன்னம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரிமுத்து வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.