ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்கு முயற்சி
தருமபுரி அருகே வெள்ளோளை கோம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வையாபுரி. இவரது மகன் பழனிச்சாமி(36). இவர் திங்கள்கிழமை காலை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்தார்.
தருமபுரி அருகே வெள்ளோளை கோம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வையாபுரி. இவரது மகன் பழனிச்சாமி(36). இவர் திங்கள்கிழமை காலை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தார். அப்போது, தங்களது நிலப்பிரச்னை தொடர்பாக பல முறை மனுசெய்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை எனக் கூறி அவர், தான் மறைத்து எடுத்து வந்த மண்ணெண்ணெயை திடீரென தனது உடலில் ஊற்றினார். பின்னர், தீப்பற்றவைக்க முயன்றார்.
இதை பார்த்த, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், விரைந்து சென்று அந்த இளைஞரை மீட்டனர். பின்னர், விசாரணைக்காக பழனிச்சாமியை தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...