புதுச்சேரி அருகே மரத்தில் பஸ் மோதி 30 பேர் காயம்
விழுப்புரத்தில் இருந்து தனியார் பஸ் புதுச்சேரி நோக்கி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தது. வேம்புப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செந்தில்முருகன் என்பவர்


வில்லியனூர் அருகே வியாழக்கிழமை மரத்தில் தனியார் பஸ் மோதியதில் 30 பேர் காயமடைந்தனர்.
விழுப்புரத்தில் இருந்து தனியார் பஸ் புதுச்சேரி நோக்கி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தது. வேம்புப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செந்தில்முருகன் என்பவர் பஸ்சை ஓட்டிச்சென்றார். கூனிச்சம்பட்டு சந்திப்பு அருகில் நெருங்கிய போது திடீரென ஸ்டியரிங் பழுதானது.
இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 30 பேர் காயமடைந்தனர். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து காயங்களுடன் கிடந்தவர்களை மீட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அனைவரும் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஒலக்கூர் பெருமாள் (55), முட்ராம்பட்டு புருஷோத்தமன் (60), எம்.குச்சிப்பாளையம் சாவித்திரி (45), ஜெயா, முண்டியம்பாக்கம் முத்துராஜ் (20), அஜித்குமார் (19), அனந்தமங்களம் ராமு (30), வெட்டுக்காடு தமிழ்ச்செல்வி, திருவள்ளிக்குப்பம் ஜெயபாரதி, மதுரப்பாக்கம் பழனியம்மாள், மண்ணாடிப்பட்டு முத்தாள் உள்ளிட்ட 30 பேர் காயம் அடைந்தனர். இதில் பெருமாள், புருஷோத்தமன் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
புதுச்சேரி போக்குவரத்து எஸ்பி குணசேகரன், வில்லியனூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். ஓட்டுநர் செந்தில்முருகன் கைது செய்யப்பட்டார்.
பேரவை துணைத் தலைவர் ஆறுதல்
சட்டப்பேரவை துணைத் தலைவர் டிபிஆர். செல்வம், மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஏ.வீ. வீரராகவன் ஆகியோர் மண்ணாடிப்பட்டு அரசு மருத்துவமனையில் காயமடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினர். மேலும், ஆம்புலன்ஸ் பற்றாக்குறை காரணமாக விபத்தில் காயமடைந்த சிலரை செல்வம் தனது காரில் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...