ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

மாஞ்சோலை மலையில் மழை பெய்ததால் செவ்வாய்க்கிழமை மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

News image
Updated On :30 டிசம்பர் 2014, 6:51 am

ஷேக் அப்துல்காதர்

மாஞ்சோலை மலையில் மழை பெய்ததால் செவ்வாய்க்கிழமை மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்துள்ளது. ஆலங்குளத்தில் அதிகபட்சம் 65.2 மி.மீ மழையும், ஸ்ரீவைகுண்டத்தில் 24 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் திங்கள்கிழமை இரவு மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆலங்குளத்தில் 65.2 மி.மீ மழை பெய்துள்ளது. திருநெல்வேலியில் 6.3 மி.மீ மழையும், பாளையங்கோட்டையில் 14 மி.மீ மழையும், மூலக்கரைப்பட்டியில் 10.1 மி.மீ மழையும்,

அம்பாசமுத்திரத்தில் 28 மி.மீ மழையும், கன்னடியன் அணைக்கட்டில் 13 மி.மீ மழையும், தூத்துக்குடியில் 3 மி.மீ மழையும், சாத்தான்குளத்தில் 20.2 மி.மீ மழையும், காயல்பட்டினத்தில் 15 மி.மீ மழையும், ஸ்ரீவைகுண்டத்தில் 24 மி.மீ மழையும், கோவில்பட்டியில் 5 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்: மாஞ்சோலை, நாலுமுக்கு வனப்பகுதியில் மழை பெய்ததால் செவ்வாய்க்கிழமை மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் வெளியூர்களிலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.