காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாச்சியார்புரம் அருகே சாலை விபத்தில் இருவர் பலி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியைச் சேர்ந்த சின்னையா மகன் ஆறுமுகம் (31) இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். சனிக்கிழமையன்று கல்லலில்

News image
Updated On :1 பிப்ரவரி 2014, 1:47 pm

சரவண பெருமாள்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியைச் சேர்ந்த சின்னையா மகன் ஆறுமுகம் (31) இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். சனிக்கிழமையன்று கல்லலில் வேலைபார்த்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது பத்தனம்பட்டி விளக்கு என்ற இடத்தில் வண்டி கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக எதிரே இருந்த கல்லில் மோதியதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அதே சாலையில் தளாக்காவூரைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் கவியரசு(22) . இவர் மானகிரியிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அவர் பின்னால் வந்த டிப்பர்லாரி அவர் வண்டியின் மீது மோதியதில் கவியரசு சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த இரு சாலை விபத்துக்கள் குறித்து நாச்சியார்புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.