டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இந்திய கம்யூனிஸ்ட் - அதிமுக கூட்டணி: ஜெயலலிதா அறிவிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடனான சந்திப்புக்குப் பின்னர் அதிமுக பொதுச் செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்தார்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:17 am

அரவிந்தன்

வரும் மக்களவைத் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடனான சந்திப்புக்குப் பின்னர் அதிமுக பொதுச் செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்தார்.

அமைதி, வளம், முன்னேற்றம் என்பதே அதிமுக கூட்டணியின் கொள்கை முழக்கம் என்று கூறினார் முதலமைச்சர் ஜெயலலிதா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.பி.பரதன், சுதாகர் ரெட்டி, தா பாண்டியன் ஆகியோர் முதல்வரைச் சந்திக்க மதியம் 1.20க்கு வந்தனர். சுமார் 25 நிமிடங்கள் சந்திப்பு இருந்தது. பின்னர் 1.45க்கு வெளியே வந்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, இந்திய கம்யூ., கட்சியோடு அதிமுக கூட்டணி அமைந்துள்ளதாகத் தெரிவித்த ஜெயலலிதா, தொகுதி, போட்டியிடும் விவரங்கள் அனைத்தும் பின்னர் பின்னர் தெரிவிக்கப்படும் என்றார்.

ஜெயலலிதா பிரதமர் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உண்டா என்பது பற்றி ஏ.பி. பரதனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர்,

கூட்டணி வெற்றி பெறும் போது அதற்கான வாய்ப்பு தானாக வரும்; பிரதமர் வாய்ப்பு அமையும் என்றார். மற்ற விவரங்கள் எல்லாம் பின்னர் தெரிவிக்கப்படும் என்றார் அவர்.  தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பிரகாஷ் காரத் நாளை சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.