தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மானாமதுரை-செங்கோட்டை இடையே சிலம்பு எக்ஸ்பிரஸ் சேவை தொடக்கம்

மானாமதுரை- செங்கோட்டை இடையே  நீட்டிக்கப்பட்ட சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியது. மானாமதுரை- சென்னை-மானாமதுரை இடையே வாரம் இருமுறையாக கடந்த ஜூலை மாதம் முதல் சிலம்பு

News image
Updated On :2 பிப்ரவரி 2014, 7:30 am

யுகன்

மானாமதுரை- செங்கோட்டை இடையே  நீட்டிக்கப்பட்ட சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியது. மானாமதுரை- சென்னை-மானாமதுரை இடையே வாரம் இருமுறையாக கடந்த ஜூலை மாதம் முதல் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. பகல் முழுவதும் மானாமதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்த ரயில் பிப்ரவரி 2 ந் தேதி முதல் நெல்லை மாவட்டம் செங்கோட்டை வரை நீட்டிக்கப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்தது.

சிலம்பு எக்ஸ்பிரஸ் மானாமதுரை-செங்கோட்டை-மானாமதுரை இடையே மட்டும் சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் சனிக்கிழமை இரவு 8.20 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 க்கு மானாமதுரை 2 வது பிளாட்பாரத்துக்கு வந்து சேர்ந்த  சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் இங்கிருந்து சிறப்பு ரயிலாக 9.30 க்கு செங்கோட்டைக்கு தனது நீட்டிக்கப்பட்ட சேவையை தொடங்கியது. இந்த ரயிலில் சாதாரண வகுப்பு பெட்டியில் சில பயணிகள் மட்டும் பயணம் செய்தனர். முன்பதிவு மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் அனைத்தும் பயணிகள் இல்லாமல் காலியாகவே சென்றன.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் எம்.பி மாணிக்தாகூர் தலைமையில் ஏராளமானோர் கூடி இந்த ரயிலுக்கு வரவேற்பு கொடுத்தனர்.

அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர்,ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி வழியாக மதியம் 1.30 க்கு செங்கோட்டை இந்த ரயில் செங்கோட்டை சென்றடையும்.

மறுமார்க்கத்தில்  அங்கிருந்து 2.30க்கு புறப்பட்டு மாலை 6.30க்கு மானாமதுரை வந்தடையும். அதன்பின் மானாமதுரையிலிருந்து இரவு 8.15க்கு சென்னை புறப்பட்டுச் செல்லும்.

புதன், சனி ஆகிய கிழமைகளில் சென்னையிலிருந்தும் வியாழன்,ஞாயிறு ஆகிய கிழமைகளில் செங்கோட்டையிலிருந்தும் இந்த ரயில் இயக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.