தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இளையான்குடி அருகே ஜாதியைச் சொல்லி திட்டியதால் விவசாயி தற்கொலை

இளையான்குடி அருகே அரணையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நள்ளாலு(50) இவர் இக் கிராமத்தில் அழகர் என்பவரது பருத்திக்காட்டில் ஆடுகளை மேய்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அழகர் நள்ளாலுவை

News image
Updated On :4 பிப்ரவரி 2014, 12:24 pm

யுகன்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஜாதியைச் சொல்லி திட்டியதால் விவசாயி தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இளையான்குடி அருகே அரணையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நள்ளாலு(50) இவர் இக் கிராமத்தில் அழகர் என்பவரது பருத்திக்காட்டில் ஆடுகளை மேய்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அழகர் நள்ளாலுவை அவரது ஜாதியைச் சொல்லி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இச் சம்பவம் குறித்து தனது மகன் சதீஷிடம் நள்ளாலு தெரிவித்துவிட்டு இது குறித்து இளையான்குடி காவல் நிலையத்தில் புகார் செய்யப்போவதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். நீண்டநேரமாகியும் தந்தை வீடு திரும்பாததால் நள்ளாலுவைத் தேடி சதீஷ் சென்றுள்ளார். அப்போது வழியில் உள்ள கருவேல் மரத்தில் நள்ளாலு தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்தார்.

அழகர் ஜாதியைச் சொல்லி திட்டியதால்தான் தந்தை நள்ளாலு தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டதாக இளையான்குடி காவல் நிலையத்தில் சதீஷ் புகார் செய்தார். போலீஸார் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.