6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நின்ற லாரிமீது கார், மோட்டார் சைக்கிள் மோதி அலுவலர் உள்ளிட்ட 3 பேர் காயம்

மேலூர் திருச்சி நான்குவழிச்சாலையில் மணப்பட்டிவிலக்கு அருகே நின்ற லாரிமீது காரும் அதன்மீது மோட்டார் சைக்கிளும் புதன்கிழமை காலை மோதிக்கொண்டதில் மத்திய

News image
Updated On :5 பிப்ரவரி 2014, 1:07 pm

தர்மராஜ்

மேலூர் -திருச்சி நான்குவழிச்சாலையில் மணப்பட்டிவிலக்கு அருகே நின்ற லாரிமீது காரும் அதன்மீது மோட்டார் சைக்கிளும் புதன்கிழமை காலை மோதிக்கொண்டதில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அலுவலர் உள்ளிட்ட மூவர் காயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்ட மனிதவள மேம்பாட்டுத்துறை அலுவலர் விஜயகுமார். ஒருகாரில் திருச்சிக்கு நான்குவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தார். தும்பைப்பட்டியையடுத்துள்ள மணப்பட்டி விலக்கு அருகே முன்னாள் சென்ற லாரி திடீரென நின்றதால் பின்னாள் சென்றுகொண்டிருந்த கார் லாரிமீது மோதியது. இதில் விஜயகுமார் கார் டிரைவர் சத்தியநாராயணனும் காயமடைந்தனர்.

இந்த காரைப் பின்தொடர்ந்துவந்த கச்சிராயன்பட்டி அன்புக்கரசு மகன் அரவிந்த் (20). பாலிடெக்னிக் மாணவன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் காரில்மோதி விபத்துக்குள்ளானது. அதில் அரவிந்தனும் காயமடைந்தார். மூவரும் 108 ஆம்புலன்சில் மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்துக்குறித்து கொட்டாம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருச்சியிலிருந்து மதுரைக்கு மணல் ஏற்றிவரும் லாரிகளும், ஏற்றச்செல்லும் அரைபாடி லாரிகளும் போக்குவரத்து விதிகளை மீறிச்செயல்படுகின்றன. வழுப்பான டயர்கள் அடிக்கடி பழுதாகி நடுரோட்டிலேயே நின்றுவிடுகின்றன. நான்குவழிச்சாலையில் விரைவாகச்செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் நின்றலாரிகள் மீது மோதியவிபத்தில் சிக்குகின்றன. போக்குவரத்து போலீஸார் அரைபாடி லாரிகளை கவனமுடன் கண்காணிக்கவேண்டும் என வாகனஓட்டிகள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.