விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இடத் தகராறில் பக்கத்து வீட்டுப் பெண்ணை விறகுக் கட்டையால் அடித்துக் காயப்படுத்திய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கொத்தங்குளம், நடுத்தெருவைச் சேர்ந்தவர் வீரலட்சுமி. இவரது பக்கத்தில் குடியிருந்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி ஆண்டாள் (44). ஆண்டாள், முத்துலிங்காபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் இடத் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் வீரலட்சுமி தனது வீட்டின் விறகுக் கட்டைகளை, வீட்டை ஒட்டி அடுக்கி வைத்திருந்துள்ளார். இதில் ஆசிரியை ஆண்டாளுக்கும் வீரலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமுற்ற ஆசிரியை ஆண்டாள் விறகுக் கட்டையால் வீரலட்சுமியை அடித்துள்ளார்.
இதில் காயமுற்ற அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வன்னியம்பட்டி போலீஸில் வீரலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியை ஆண்டாளைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

