ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் உள்ள சேவாமந்திர் ஆசிரியர் பயிற்சி பள்ளி உள்ளது. இப்பள்ளியில் குள்ளஞ்சாவடி அருகே உள்ள கருமாச்சிபாளையத்தைச் சேர்ந்த சண்முகம் மகள்


சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவி ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் உள்ள சேவாமந்திர் ஆசிரியர் பயிற்சி பள்ளி உள்ளது. இப்பள்ளியில் குள்ளஞ்சாவடி அருகே உள்ள கருமாச்சிபாளையத்தைச் சேர்ந்த சண்முகம் மகள் ஜனனி (19) 2-ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பு பயின்று வருகிறார். சரியாக படிக்காததால் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் கடிதம் அனுப்பி சனிக்கிழமை மாலை வரவழைத்துள்ளனர். அப்போது பெற்றோர், மகள் ஜனனியை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜனனி பெற்றோர் சென்றவுடன் பள்ளி கிணற்றில் குதித்தது தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...