ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பால்ய விவாகம் நடத்தப்படவில்லை: அதிகாரிகளிடம், தீட்சிதர்கள் மறுப்பு

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் பிப்.10-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை நடைபெறவுள்ள 28 சிறுவர்களின் பால்ய விவாகங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ

News image
Updated On :9 பிப்ரவரி 2014, 1:00 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் பிப்.10-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை நடைபெறவுள்ள 28 சிறுவர்களின் பால்ய விவாகங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தது.

இதனையடுத்து கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி, நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் ஆகியோர் நடராஜர் கோயிலுக்கு சென்று தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது பொதுதீட்சிதர்கள் தாங்கல் பூனூல் திருமணம்தான் நடத்தவுள்ளோம். பால்ய விவாகம் அல்ல என தெரிவித்ததை அடுத்து சமூகநலஅலுவரும், போலீஸார் விசாரணை முடித்து திரும்பினர்.

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் வருகிற பிப்.10-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை 28 சிறுவர்களுக்கு பால்ய விவாகம் (திருமணம்) நடத்த உள்ளதாக முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் மூலமாக தகவல் வர பெற்றுள்ளது என்றும், சட்டப்படி தடைவிதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள பால்ய விவாகத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை புகார் அளி்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.